சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழைப் பெய்தது. இதன் காரணமாகப் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நின்றது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பூந்தமல்லி -ஆவடி சாலை, பூந்தமல்லி- வேலப்பன்சாவடி பைபாஸ் சர்வீஸ் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
















