தைவானுக்கு ஆதரவான கருத்தால் ஜப்பானுக்குச் சீன அரசு பொருளாதார நெருக்கடிகளை அளித்து வருகிறது.
தெற்காசிய நாடான தைவானைத் தன் நாட்டின் ஒரு பகுதியாகச் சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக விமானங்களை ரத்து செய்தல், சுற்றுலாபயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் போன்ற சீனாவின் நடவடிக்கைகளால் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
















