பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரைப் பறித்த இரு இளைஞர்களுக்கு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு கலிபோர்னியாவின் பெல் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரியாஸ் ப்ராப்ஸ்ட் என்பவரை, ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர் கீஸ் ஆகிய இளைஞர்கள் திருடிய காரைக் கொண்டு வேண்டுமென்றே மோதி கொலைச் செய்தனர்.
மேலும், அந்த முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொலையாளிகள் ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர் கீஸ்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
















