ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில், புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி ராஜ்குமார் என்பவர்ப் பலரிடம் பணம் வசூலித்துள்ளார்.
அண்மையில் வெளியான தேர்வு பட்டியலில் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், ராஜ்குமாரைப் போலீசார் கைது செய்தனர்.
அதில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் அதில் 35 லட்சம் ரூபாயைப் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளர் மகேஸிடம் கொடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்துத் தலைமறைவாக உள்ள துணைப் பதிவாளர் மகேஷை லஞ்ச ஒழிப்புத்துறையினர்த் தேடி வருகின்றனர்.
















