விருதுநகர் அருகே கஞ்சா புகைப்பதைக் கிராம மக்களிடம் காட்டிக்கொடுத்த சிறுவர்களை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி கஞ்சா புகைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை, அவர்களுடன் பழகிய சிறுவர்கள் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும், சிறுவர்களைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இருதரப்பினரையும் நேரில் அழைத்துக் கட்டப்பஞ்சாயத்து நடத்தி சமாதானம் செய்து வைத்ததாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சிறுவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















