சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களின் சார்பாக, எத்தியோப்பியாவில் நிற்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் எனத் தெரிவித்தார்.
சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகம் என்பதால், தான் வீட்டில் இருப்பது போல் உணர்வதாகவும் அவர் நெகிழ்ச்சியடைந்தார்.
இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நிலத்தைத் தாய் எனக் குறிப்பிடுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியின் உரையைக் கேட்ட எம்பிக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரதமருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் கரவொலி சத்தத்திற்கு இடையே எம்பிக்கள் இடத்திற்கே சென்று பிரதமர் மோடி அவர்களிடம் கைக் குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக எத்தியோப்பியாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது பிரதமர் மோடி கை தட்டி அதனை உற்சாகத்துடன் கண்டு களித்தார்.
















