விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகங்கள் அமைக்கவும் ராமதாஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 10. 5% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் போன்ற 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
















