புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயண நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைத் தூய்மை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
















