சென்னையில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் புதிய சிறப்பு மையம் வடபழனி காவேரி மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர்ச் செரிமானக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பிரத்யேக சிகிச்சை அளிக்கும் விதமாக வடபழனியில் உள்ள தனியார் விடுதியில், வடபழனி காவேரி மருத்துவமனைச் சார்பில், காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ்’ என்ற பிரத்யேகச் செரிமான மண்டல சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன், வாழ்க்கை முறைச் சார்ந்த நோய்த்தடுப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
இந்தப் புதிய மையத்தில் அனுபவம் வாய்ந்த இரைப்பை, குடலியல் மருத்துவர்கள், எண்டோஸ்கோபி நிபுணர்கள் மற்றும் செரிமான நல சிறப்பு மருத்துவக் குழு ஒருங்கிணைந்து சிகிச்சை வழங்குகின்றனர்.
















