திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று தொடரவுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து வருகின்றனர்.
நான்காம் நாள் விசாரணையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தீர்ப்பை செயல்படுத்தக்கூடாது என்பதற்காகவே போலீஸ் குவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.
உயர்நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மதிக்கவில்லை என்றும், இதனால் தேவையற்ற பதற்றம் உருவாக்கப்பட்டதாகவும் வாதிட்டது.
அப்போது, இந்த விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போல் தெரிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை 5 ஆவது நாளாக இன்று நடைபெறவுள்ளது
















