இரவு நேர கேளிக்கை விடுதி தீ விபத்து சம்பவத்தில் கைதான லூத்ரா சகோதரர்களுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவா கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், அதன் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்து தப்பிச் சென்றனர்.
அவர்களை இன்டர் போல் உதவியுடன் நாடு கடத்திய கோவா போலீசார், மபூஸா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது லூத்ரா சகோதரர்கள் இருவருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர்களை போலீசார் தங்கள் வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
















