அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முக சுந்தரத்திற்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அண்சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், டிஎஸ்பி சண்முக சுந்தரத்தின் பெயர் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து,
தனக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஐந்து காவலர்களுக்கு ஜாமின் வழங்கப்படாததை சிபிஐ தரப்பு சுட்டிக்காட்டியது.
மேலும், டிஎஸ்பி சண்முக சுந்தரத்தை விசாரிக்க தேவை இருப்பதால், அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் சிபிஐ தரப்பு வாதிட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
















