ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிவன் கோயிலில் மரகதலிங்கம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் இரவு பிரதோஷ விழா நடைபெற்றது. பின்னர் கோயில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பூசாரிகள், காலை வந்தபோது மரகதலிங்கம் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
















