சிவகங்கை அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குழாய் பதித்து 1 வருடமாகியும், தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சிவகங்கை அடுத்துள்ள இடையமேலூர் கிராமத்தில் உள்ள ஆதி திராவிட குடியிருப்பில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன், ஒவ்வொரு வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், ஊரக வளர்ச்சித்துறையும் இதனை கவனத்தில் கொண்டு தங்கள் சிரமத்தைப் போக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















