அமெரிக்காவில் பிரபல உணவக கிளையில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அந்நாட்டின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் ஹார்ட்ஃபோர்டில் பிரபல ‘சிப்போட்லே’ (Chipotle) உணவக கிளை செயல்பட்டு வருகிறது.
அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், உணவு ஆர்டர் செய்துள்ளார். நீண்டநேரமாகியும் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், உணவக ஊழியர் மீது சராமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு உணவக ஊழியரும் தாக்குதல் நடத்தியதால் அந்த உணவகமே போர்க்களமாக மாறியது. இதனால் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தனர். இதுதொடர்பாகச் சிப்போட்லே’ உணவகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















