கோவை மாவட்டம், சூலூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பரத் என்பவர் கடந்த 15ஆம், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டின் காத்திருப்போர் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது நண்பர்களான கோகுல், விக்னேஷ், சபரீசன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
கோகுல் நடத்தி வந்த செல்போன் கடையில் பணியாற்றிய பரத், விலை உயர்ந்த செல்போனை திருடியதால் அவர் தாக்கப்பட்டதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















