டித்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளமுடியாமல், இலங்கை மக்கள் இன்னும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக, அண்டை நாடான இலங்கை உருக்குலைந்தது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலுமாக முடங்கியது.
இந்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மக்கள் இன்னும் மீள வில்லை என்றே தெரிகிறது. குறிப்பாகப் பீடியாபாம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, சாலையோரங்களில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
தங்களை பாதுகாப்பான வேறொரு இடத்தில் குடியமர்த்தும் மாறும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















