அண்டார்டிகாவில், வழக்கத்திற்கு மாறான ஒரு விளையாட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தென் துருவத்திலிருந்து 600 மைல் தொலைவில், உறைபனிக்கு நடுவே மாரத்தான் வீரர்கள் சிலர் ‘பின்னோக்கி ஓடிப் புதிய சரித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 15ம் தேதியன்று, அண்டார்டிகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளை முடித்துவிட்டுத் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய வீரர்கள், விமானத்தின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
நீண்ட காத்திருப்பினால் ஏற்பட்ட சலிப்பை விரட்ட எண்ணிய அவர்கள், அதை ஒரு வேடிக்கையான சாகசமாக மாற்ற முடிவு செய்தனர்.
அதன் விளைவாக உருவானதுதான் அண்டார்டிகாவின் முதல் “பின்னோக்கி ஓடும் மாரத்தான் பந்தயம்.
பனிப்பாறைகள் மீது ஒரு மைல் தூரம் பின்னோக்கி ஓடுவது என்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு மிகப்பெரிய சவால் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















