மயிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வள்ளுவக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையறிந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதாகச் சீர்காழி வட்டாட்சியர் கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
















