கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 12ஆம் தேதி ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற தனியார் நிறுவன பேருந்து மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர்.
இந்தச் சம்பவத்தில் இளம்பெண் படுகாயமடைந்த நிலையில், பாலகுறியைச் சேர்ந்த சக்திவேல், தனுஷ், சேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடந்த மாதம் தனியார் நிறுவன பேருந்து மோதியதில் நண்பர்கள் இருவர் உயிரிழந்ததால்,பேருந்துமீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
பன்றிகளைவேட்டையாடப் பயன்படுத்தும் நாட்டுவெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
















