அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சிநேயர் கோயில் பிரகாரம் முழுவதும் இரண்டரை டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் உலக புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி சுமார் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளிக்க உள்ளார்.
நாளை ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒரு லட்சத்து எட்டு வடை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் கோயில் பிரகாரம் முழுவதும் இரண்டரை டன் எடையுள்ள ரோஜா, சாமந்தி, ஜிப்ஸி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
















