திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாத வியாழக்கிழமையையொட்டி குருபகவானை வணங்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த குரு ஸ்தலமாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்கி வருகிறது.
வியாழனன்று குருபகவானை வணங்கினால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மார்கழி மாத முதல் வியாழக் கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர்.
திருச்செந்தூர் கடல், மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
















