ஸ்பெயினின் படலோனா நகரில் கைவிடப்பட்ட பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்த 400க்கும் மேற்பட்ட அகதிகள் நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்டனர்.
வறுமை காரணமாக ஆப்பிரிக்கா நாடான செனெகல் மற்றும் காம்பியா நாட்டை சேர்ந்தவர்கள் ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்.
அவர்கள் படலோனா நகரில், கைவிடப்பட்ட பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டிடம் உறுதியற்று இருப்பதால் எந்த நேரமும் இடிய வாய்ப்புள்ளதாகக் கூறி, ஸ்பெயின் நீதிமன்றம் அங்கிருப்பவர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் வெளியேற்றப்பட்டவர்களில் 18 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்தனர்.எஞ்சியவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றனர்.
















