திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சொத்துக்காகத் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
முருகத்தாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலசெந்தில் என்பவர் தனது வயதான தந்தை மண்ணுவிடம் சொத்துகளை விற்று பணம் தரும்படி, அடிக்கடி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அவர் மதுபோதையில் மீண்டும் தனது தந்தையிடம் தராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தந்தை மண்ணுவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திப் பாலசெந்தில் கொலை செய்துள்ளார். இதையடுத்து பாலசெந்திலை பிடித்த பொதுமக்களை, அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
















