மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்தப் போட்டிகளையும் நடத்த அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறாமல், ஜல்லிக்கட்டு உட்பட எந்தப் போட்டிகளையும் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்கு வதை தடுப்பு சட்டத்தின்படி, காளைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் எனத் தெரிவித்துள்ள கால்நடைத்துறை, போட்டி நடக்கும் முன், அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாகச் செய்திருக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது.
















