நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒன்பதாவது நபராக, யாசிர் அகமது தார் என்பவரை டெல்லியில் NIA கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த யாசிர் தாருக்கு, டெல்லி குண்டுவெடிப்பு சதியில் முக்கியப் பங்கு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இவர், குண்டுவெடிப்புக்கு முன் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த தீவிரவாத கும்பலுக்கு உறுதிமொழி அளித்திருந்தார் என்பதையும், உமர் உன் நபி, முஃப்தி இர்ஃபான் உள்ளிட்ட தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்ததையும் NIA கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யாசிர் தாரை கைது செய்து NIA விசாரித்து வருகிறது.
















