சிவகங்கையில் 17 வயது சிறுவன் ஓட்டிய பைக் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பாச்சேத்தி அடுத்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர், பிரியா தம்பதியின் 5 வயது மகளான தன்ஷிகா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பைக்கை ஒட்டி வந்து தன்ஷிகா மற்றும் மற்றொரு குழந்தை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குழந்தைகள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்ஷிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து உறவினர்கள் சிறுமியின் உடலை வாங்க மறுத்துத் திருப்பாச்சத்தி அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தையின் இறப்பிற்கு காரணமான 17 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆசை தம்பி ஆகியோரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
















