தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டுமான இடத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
ஹைதராபாத்தின் சந்தநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
சுமார் 50 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டடம் கட்டும் பணியின் போது, தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெட்களில் எதிர்பாராத விதமாகச் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்து நிகழ்ந்தபோது தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
















