தாய்லாந்தின் பான்டே மீஞ்சே மாகாணத்தில் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதால் பள்ளிகளில் இருந்து குழந்தைகள் ஓட்டம் பிடித்தனர்.
கம்போடியா – தாய்லாந்து இடையே எல்லை பிரச்னை காரணமாகப் போர் மூண்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் பான்டே மீஞ்சே மாகாணத்தில் உள்ள செரி சாஃபோன் நகருக்கு அருகில் அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான எஃப்-16 போர் விமானம் திடீரென குண்டுகளை வீச தாக்குதல் நடத்தியது.
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் வகுப்பறைகளில் புத்தகப் பைகளை தூக்கி கொண்டு வீடுகளுக்கு ஓடினர்.
















