சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர் உருட்டப்பட்ட எஃகு மீது இந்தியா இறக்குமதி வரி விதித்துள்ளது.
மத்திய அரசின் வர்த்தக தீர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர் உருட்டப்பட்ட திசையற்ற மின்சார எஃகு மீது 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு டன்னுக்கு 415 டாலர்கள் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும், சீனாவிலிருந்து வரும் நியாயமற்ற விலை நிர்ணயமுள்ள இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
















