கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த லாரி, பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை மாநகரில் நடைபெறும் சாலை பணிகளால் சரவணம்பட்டி, விளாங்குறிச்சி பகுதிகளில் சாலை சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், களப்பட்டியில் – சரவணம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, ஆழமான பள்ளத்தில் சிக்கியது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
















