வங்கதேசத்தில் மதநல்லிணகத்தை பேசிய இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுகா உபாசிலா பகுதியில் திபு சந்திரதாஸ் என்ற இளைஞர் அனைத்து மதங்களும் சமம், கடவுள் ஒருவரே, அவர் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
அவருடை கருத்து இஸ்லாத்திற்கு எதிரானது எனக் கூறி அங்குத் திரண்ட கும்பல் சந்திரதாஸை கடுமையாகத் தாக்கியதுடன் தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவம் அந்நாட்டில் சிறுபான்மையாக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















