தருமபுரி மாவட்டம் தொப்பூர் நெடுஞ்சாலையில் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொப்பூர் நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற டாரஸ் லாரி மீது பின்னால் வந்த கனரக லாரி மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி, சாலையில் கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
















