நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறையாகப் பணி வழங்க வலியுறுத்தி மதுரை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வரை, மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை, கடந்த சில மாதங்களாகச் சுழற்சி முறையில் மாதத்திற்கு ஒரு வாரம் மட்டுமே வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, பழைய முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பழைய முறையில் பணி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
















