சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணிக்கு வராததை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நங்கவள்ளி பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணியாற்றி வருபவர் நாகேஸ். இவர் முறையாகப் பணிக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
நாகேஸின் நடவடிக்கையைக் கண்டித்து, பேருராட்சி அலுவலகத்தைத் திறக்க விடாமல் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிப் பேசிய அவர்கள், ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பேரூராட்சி கூட்டம் நடைபெறுவதால், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை என ஆதங்கத்துடன் கூறினர்.
பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
















