ஜார்க்கண்டில் யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தின் வனப்பகுதியை ஒட்டிக் கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது.
யானைகளை கண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில், இளைஞர் ஒருவர் செல்போனில் யானைகளுக்கு மிக அருகில் சென்று செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது காட்டு யானை ஒன்று அந்த இளைஞரை துரத்திச் சென்று தாக்கியது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















