கனடாவின் மனிடோபா மாகாணத்தில் கடும் பனிப்புயல் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மனிடோபா மகாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெப்பநிலை மைனஸ் 24 டிகிரி செல்சியஸாக உள்ளது.
மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குப் பனி பொழிந்து வருகிறது.
இதனால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்குமாறும், வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















