நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையத்தில் அதிவேகமாக வந்த ஆம்னி வேன், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிபாளையத்தை சேர்ந்த பூமதி என்பவர், பள்ளியிலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது, அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் மோதிக் கவிழ்ந்தது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
















