திருச்செந்தூர் அடுத்த கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், திறந்தவெளியில் உட்கார்ந்து மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பெற்றோர், மாணவர்களின் நலன் கருதி வகுப்பறையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















