தைவானுக்கு சுமாா் 1 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது எனச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் தைவான் எல்லைக்குள், சீனா, போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டி வருகின்றது.
இந்நிலையில் தைவானுக்கு சுமாா் 1 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
நடுத்தர தொலைவு ஏவுகணைகள், ஹோவிட்சா் பீரங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்காக 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 82 பீரங்கிகள், ஏவுகணைகள், ஹெலிகாப்டா் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், தைவானுக்கான அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத விற்பனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே தைவானை தனது நாட்டின் அங்கமாகக் கூறிவரும் சீனா, இந்த ஒப்பந்தங்களுக்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உறவுகளில் இது புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
















