சென்னை பூந்தமல்லியில் மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைக்க, துணை முதலமைச்சர் உதயநிதி தாமதமாக வருகை தந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பூந்தமல்லியில் மின்சார பேருந்து பணிமனை மற்றும் மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, அவர் வரத் தாமதமானதால் வெளியூர் செல்லும் பயணிகள், வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
மேலும், கழிவறை முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். இதனிடையே, வெயிலின் தாக்கத்தால் சிலர் மயங்கி விழுந்தனர்.
















