ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
முதல் நாள் உற்சவத்தில் பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தியும், வைர நகைகளை அணிந்து கொண்டும் சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















