பணி நிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாகச் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் விடிய விடியச் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசுத் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய செவிலியர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
















