பதவி உயர்வு, பணி மேம்பாட்டு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் பேராசிரியர்கள் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை சந்திப்புப் பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்த ஆசிரியர்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு தொகை மற்றும் நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் நெல்லைக்கு முதலமைச்சரின் வருகையை ஒட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கையில் அல்வா பாக்கெட்டுகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலரும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
















