வங்கதேசத்தில், மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தனது காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியை, கடந்த 12ம் தேதி தலைநகர் டாக்காவில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஷெரீப் உஸ்மானின் மரணத்திற்கு நீதி கேட்டு வங்கதேசம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஷெரீப் ஓஸ்மானை சுட்டுக்கொன்ற அவாமி லீக்கின் கட்சியின் நிர்வாகி பைசல் கரீம் மசூத், தனது காதலியிடம் கூறிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
சம்பவத்திற்கு முதல் நாள், தனது காதலியிடம் “நாளை வங்கதேசமே அதிரும் வகையில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. அதைக் கண்டு ஒட்டுமொத்த வங்கதேசமும் நடுங்கும் எனக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
















