சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில், 60 வயது இதய நோயாளிக்கு ‘டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர்’ (Dual-Chamber Leadless Pacemaker) பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 60 வயது முதியவருக்குக் கடுமையான இதயத்துடிப்பு குறைபாடு காரணமாகச் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ‘அட்ரியோவென்ட்ரிகுலர் பிளாக்’ (Atrioventricular Block) இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு ‘டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர்’ சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாபு ஏழுமலை, வழக்கமான வயர் பேஸ்மேக்கர்களில் சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இந்த லீட்லெஸ் பேஸ்மேக்கர் மூலம் பக்கவிளைவுகள் இன்றி இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்று கூறினார்.
















