காங்கோவின் கிண்டு விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் இல்லாததால் பணிகள் விமானத்தில் இருந்து குதித்த வீடியோ வைரலாகி உள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் மணிமா மாகாணத்தில் உள்ள கிண்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது.
விமானத்தில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு நகரும் படிக்கட்டுகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் விமானத்தின் நுழைவாயிலில் இருந்து தரையில் குதித்து இறங்கினர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
















