வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த யாத்ரீகர்கள் கோஷமிட்ட படி தப்பிசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்திலிருந்து மதுரை வரை ரயிலில் வந்த 400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அங்கிருந்து பயணிகள் ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றடைந்தனர்.
இதில் 100 பேர் மட்டுமே பயண சீட்டு வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் சிலரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
மீதமுள்ள யாத்ரீகர்கள் அபராத தொகையைச் செலுத்தாமல் சத்ரபதி சிவாஜி சிந்தாபாத், ஜெய் ஹோ எனக் கோஷங்களை எழுப்பியவாறு தப்பி சென்றனர்.
















