சிரியாவில் நகைக்கடை ஒன்றில் இருவரை சுட்டுக்கொன்றுவிட்டு மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எல்-ஜூலானியின் தலைமையிலான புதிய நிர்வாகம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அலெப்போ நகரில் ஆயுதமேந்திய கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் அலெப்போ நகரில் உள்ள நகைக்கடைக்குள் மர்மநபர்கள் இருவர் புகுந்தனர். தொடர்ந்து கடையின் உரிமையாளர்களான சகோதரர்கள் இருவரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்று விட்டு நகைளை கொள்ளையடித்து சென்றனர்.
















