மதுரையில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
மதுரை மாநகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜன் என்பவர் மகள் அம்பிகாராஜனுடன் வசித்து வரும் நிலையில், வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் இருந்து திடீரெனக் கரும்புகை வந்துள்ளது.
மின்வயர்கள் மூலமாகத் தீ பரவிய நிலையில், திடீரெனத் தொலைக்காட்சி வெடித்து சிதறியது. கரும்புகை சூழ்ந்ததால் பதறிபோன தந்தையும், மகளும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த புத்தகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















